பார்க்காமலேயே ஃபேஸ்புக் மூலம் காதலித்த வாலிபர் ஒருவர் நேரில் பார்த்த பின்னர் திருமணம் செய்ய மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்ற 27 வயது வாலிபர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மலேசியாவில் உள்ள ஒரு அமுதேஸ்வரி என்ற பெண்ணுடன் பேஸ்புக்கில் நட்பாக இருந்து உள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இதனை அடுத்து தன்னுடைய காதலரை நேரில் பார்க்க மலேசியாவிலிருந்து அமுதேஸ்வரி தேனிக்கு வந்துள்ளார்
ஃபேஸ்புக்கில் உருக உருக காதலித்த அசோக்குமார் அமுதேஸ்வரியை நேரில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு 42 வயது என்பது அப்போதுதான் தெரியவந்தது. இதனை அடுத்து அமுதேஸ்வரியை திருமணம் செய்ய முடியாது என்று அசோக் குமார் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் மீண்டும் மலேசியா சென்று விட்டார்
இதனை அடுத்து அமுதேஸ்வரி சகோதரி என்று கூறிக்கொண்டு விக்னேஸ்வரி என்பவர் ஃபேஸ்புக்கில் அசோக் குமாரை தொடர்பு கொண்டுள்ளார். நீ திருமணம் செய்ய மறுத்ததால் அமுதேஸ்வரி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது தற்கொலைக்கு நீ தான் காரணம் என்றும் விக்னேஸ்வரி மிரட்டியதாக தெரிகிறது
இதனை அடுத்து விக்னேஸ்வரி தேனி வந்ததாக கேள்விப்பட்டு அவரை அசோக்குமார் நேரில் சந்தித்துள்ளார். அப்போதுதான் விக்னேஸ்வரி மற்றும் அமுதேஸ்வரி ஆகிய இருவரும் ஒன்று என்பதும் தெரிய வந்தது. விக்னேஸ்வரி என்ற பெயரில் பேஸ்புக் மூலம் அசோக்குமார் தொடர்பு கொண்டதாகவும் தன்னை காதலித்த அசோக்குமார் திருமணம் செய்ய வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அமுதேஸ்வரி புகார் அளித்தார் காவல் நிலைய அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்
ஃபேஸ்புக்கில் பார்க்காமல் செய்துகொள்ளும் காதலால் இதுபோன்ற விபரீதங்கள் வரும் என்பதே இந்த சம்பவத்தில் இருந்து கிடைக்கும் பாடமாகும்