உள்ளாட்சி தேர்தலில் தந்தை தோற்றதால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகேயுள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தந்தை வெறும் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இதனால் இவரது மகள் வான்மதி ( 22 வயது) விஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அங்குப் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.