ஜனவரி முதல் தேதியிலிருந்து, பழைய ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கும், ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கக்கூடாது என பொது விநியோகத் துறை அறிவித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 60 சதவிகிதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் 30-ம் தேதிக்குள் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்கும் மற்றும் முறைபடுத்துவற்காகவே ஸ்மார்ட் கார்ட் திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.
இதனால் ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கே ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்க வேண்டும் என அனைத்து ரேஷன் கடை அதிகாரிகளுக்கும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.