முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் நான் தெருவுக்கு தள்ளப்பட்டேன் என முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன ராவ் அவர்கள் ஆவேசமாக பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் பெரும் சக்தியுடன் வலம் வந்து கொண்டு இருந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு வந்தது என்பதும் அவர் அதனால் பல்வேறு சோதனைக்கு உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் அதற்கான பணிகளை அவர் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மதுரையில் மிகவும் ஆவேசமாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்
அந்த பேட்டியில் அவர் கூறியபோது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான் தெருவுக்கு தள்ளப்பட்டேன் என்றும் நான் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் தெலுங்கு சமுதாயத்தில் ஒரு தலைவரை உருவாக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார் அவர் உருவாக்கவிருக்கும் தலைவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்