தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி 40 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பஞ்சாப் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தெரிவித்துள்ளார்
அரசியல் சாசனத்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் என் கடமையை நான் செய்ய முடியவில்லை என்றால் நான் குற்றவாளியாக உணர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஒரு ஆளுநரின் பொறுப்பு அனைவருக்கும் வழிகாட்டுவது என்றும் பல்கலைக்கழகத்தை வழிகாட்டுவது என்றும் கூறிய அவர் என்ன நடந்தாலும் என்னுடைய கடமையிலிருந்து நான் தவற மாட்டேன் என்றும் தெரிவித்தார்.