Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்து மதுரை வந்த இலங்கை ஆசிரியருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து வரவேற்பு....

15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்து மதுரை வந்த இலங்கை ஆசிரியருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து வரவேற்பு....

J.Durai

, புதன், 16 அக்டோபர் 2024 (14:14 IST)
சுற்றுச்சூழலை வலியுறுத்தி 15000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு மதுரை வந்த இலங்கை ஆசிரியர் பிரதாபன் தர்மலிங்கத்தை தமிழக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான .ஆர்.பி. உதயகுமார் மாலை அணிவித்து வரவேற்று பணமுடிப்பு வழங்குகினார். 
 
இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் பிரதாபன் தர்மலிங்கம் (வயது 47 ) அங்கு உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் மீதும் மரங்கள் வளர்ப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் பூமி வெப்பமாவதை தடுக்கவும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சைக்கிள் பயணம் 3000 கிலோமீட்டர் மேற்கொண்டார். 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் சுற்றுச்சூழலில் விழிப்புணர்வு மற்றும் பெண்களை வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தியும் 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை 120 நாட்களில் சைக்கிளில் சுற்றிவர முடிவு செய்து கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்பி ஆந்திரா ஒடிசா மேற்கு வங்காளம் பீகார் ஹிமாச்சலப் பிரதேசம் குஜராத் மகாராஷ்டிரா கேரளா வழியாக நேற்று ராமேஸ்வரம் வந்தார். 
 
ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வழியாக இன்று காலை 8 மணிக்கு மதுரைக்கு அவர் வருகை தந்தார் அவருக்கு மதுரை வக்போர்ட் கல்லூரி அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது பாரதி யுகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி தலைமை தாங்கினார் .
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் சைக்கிள் வீரர்  பிரதாமன் தர்மலிங்கத்திற்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து அவருக்கு பணமுடிப்பு வழங்கினார். 
 
இது குறித்து பேசிய சைக்கிள் வீரர்......
 
எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்த தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி  மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் வழியாக நாளை கோவை செல்கிறேன் அங்கிருந்து சென்னை சென்று 15000 கிலோமீட்டர் தூரத்தை நிறைவு செய்கிறேன் என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நில மோசடி சம்பந்தமாக அதிமுக எம்எல்ஏ மற்றும் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் மீது ஒரே குடும்ப வாரிசுதாரர்கள் புகார்......