தமிழகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பில் ஏற்றது முதல் மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், வரும் நவம்பர் 11ஆம் தேதி 50 ஆயிரம் விவசாரிகளுக்கு கரூரில் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து, மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:
இலவச மின் சாரத்திற்குப் பதிவு செய்து காத்திருக்கும் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தபடி, தற்போது, இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளில், 1,50,000 க்கும் அதிகமானோருக்கு கடந்தாண்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அரவக்குறிச்சியிலலுள்ள தடாகம் பகுதியில் வரும் நவம்பர் 11 ஆம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.