புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் 2 பேரை போலீஸார் கைது, அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில்,சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ''இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராத பிரச்சனையாக உள்ளது.28.9 சதவீத குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர். குழந்தைகளுக்கு Good touch, Bad touch கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியமாகும்.
புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்பத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். பாதுகாப்பான நாடாகவும், சமூகமாகவும் வளர்வோம் என்று தெரிவித்துள்ளார்.