தமிழகத்தில் கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகப்பெரம்பான்மையில் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.
இன்று தமிழக அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அரசுக்கு உதவும் வகையில் 30 இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வி முறையில் தொழில் முறையில் 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் எனவும், இப்பயிற்சியின்போது ,மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் இதற்காக ரூ.5.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு புத்தாய்வு திட்டம் எனப் பெயரிட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு உதவுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.