அண்ணாமலைப் பல்கலை 86-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்......
, வியாழன், 17 அக்டோபர் 2024 (18:16 IST)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை காலை 10.30மணிக்கு பட்டமளிப்பு விழா மண்டபமான சாஸ்திரி அரங்கில் தொடங்கி நடைபெற்றது.
இவ்விழாவில் பல்கலை.வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் நேரடியாக 789 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மையில் தேர்ச்சி பெற்ற 38 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்க பதக்கம் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
மேலும் ஆராய்ச்சி பட்டமான பிஹெச்டி , எம்ஃபில் 728 பேருக்கும் வழங்கப்பட்டது.
38 பேருக்கு தங்கப் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டது. நேரடி சேர்க்கை மூலம் பயின்ற மாணவர்கள் 789 பேருக்கும், தொலைதூரக்கல்வி மையம் உள்ளிட்ட பட்டம் பெறும் மாணவர்கள் 35593 பேருக்கும் தபால் மூலம் பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
முன்னதாக துணைவேந்தர் ராம.கதிரேசன் ஆண்டறிக்கை படித்தர்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான கோவி.செழியன் பங்கேற்றார்.
புதுதில்லி இந்திய அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் முதன்மை ஆலோசகர் மற்றும் சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவருமான மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினர்.
விழாவில் பதிவாளர் எம்.பிரகாஷ் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
விழாவில் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகர், சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மிராணி, பதிவாளர் மு.பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.எஸ்.குமார், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் சீனுவாசன்ர், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அடுத்த கட்டுரையில்