இரவு 9 மணி வரை மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது தெரிந்தது. அந்த வகையில் இன்று காலை முதல் பேருந்துகள் ஓடத் துவங்கி உள்ளன.
சென்னையில் மட்டும் என்று 3300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், ஒரு இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என்றும் நின்று கொண்டு, படிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளேயே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இரவு 9 மணி வரை மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் வசதிக்காக மாவட்டத்தின் கடைசி பஸ் நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.