தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஓராண்டில் அதிகளவில் குறைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் கடந்த மாதம் ஆகஸ்டு வரை நிலத்தடி நீர் மட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆய்வில் சென்னை தவிர்த்த 31 மாவட்டங்களில் நாகப்பட்டினம் , திருப்பூர், ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஓராண்டில் ஓரளவு நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது
ராமநாதபுரத்தில் 0.04 மீ, நாகப்பட்டினத்தில் 0.32 மீ, திருப்பூரில் 0.26 மீ, தேனியில் 0.04 மீ என்ற அளவில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இது அடுத்தடுத்த நாட்களில் குறையக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது பெரம்பலூர் மாவட்டத்தில், 11.07 மீட்டர் அளவில் இருந்த நீர் மட்டம் தற்போது 14.65 என்ற அளவில் கீழிறங்கி உள்ளது. இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் 2.84 மீட்டராக இருந்த நீர்மட்டம் கீழிறங்கி 7.31 மீட்டராக உள்ளது. மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வை மேற்கொண்ட நிலத்தடி நீர் ஆதாரத் துறை, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் பல மடங்கு குறையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.