இந்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் நிலத்தடி நீர் எடுப்பது குறித்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் நிலத்தடி நீர் எடுப்பது குறித்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது. நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு நீர் வளத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா நீர்வளத்துறை அமைச்சகத்தின் (ஜல் சக்தி) நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ''நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவோர், பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
இதன்படி, நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், தொழிற்சாலை, உள் கட்டமைப்பு, தண்ணீர் விநியோக நிறுவனங்கள், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான குடிநீர் பயன்பாடு உள்ளிட்ட நிலத்தடி நீரைப் பயன்படுத்துவோர்,நீலத்தடி நீர் பயன்பாட்டளர்கள் 30.6.2022 க்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' என்று இருந்தது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சக தலைவர், நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு எண். 3/ 2022 தமிழ்நாட்டிற்கு பெருந்தாது. நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் எடுத்தல் தொடர்பாக சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.