தக்காளி விலை நாளுக்கு நாள் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதை அடுத்து பொதுமக்கள் பெரும் சிரமத்துடன் இருக்கின்றனர். மேலும் தக்காளி விலையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது என்பதால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து தக்காளி வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தக்காளி விலை குறைய வேண்டுமானால் பொதுமக்கள் ஐந்து நாட்கள் தக்காளியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வாறு தவிர்த்தால் தக்காளி விலை தானாக குறைந்து விடும் என்றும் பாஜக பிரமுகர் ஹெச் ராஜா ஐடியா கூறியுள்ளார்.
தக்காளி விலையை கட்டுப்படுத்துவது எப்படி என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் இந்த பதிலுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்