முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக உள்பட திராவிட கழகங்களை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக தலைவர்கள் தற்போது சீமான், திருமாவளவனையும் விளாச தொடங்கிவிட்டனர்.
.எஸ்.என்.எல் திருச்சி மண்டலம் சார்பாக கரூர் காெங்கு திருமண மண்டபத்தில், 'இணைவாேம்..அனைவரும் வளர்வாேம்' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியபோது, 'திருமாவளவன், சீமான் போன்றவர்கள் மனரீதியில் சரியாக உள்ளார்களா என தெரியவில்லை. அவர்களுக்கு பிரதமரை விமர்சிக்க எள்ளளவும் தகுதியில்லை. உண்மைக்கு புறம்பாக பிரதமரை விமர்சித்து பேசும் திருமாவளவனை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை பிரதமர் படம் இல்லாமல் செயல்படுத்தினால், அந்த திட்டங்களை தடுத்து நிறுத்துவோம். தமிழ்நாடு அரசு கழிவறையில்கூட காசு திருடுகிறது. தமிழகம் முழுவதையும் பாலைவனமாக்கிய திராவிடக் கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழர்களின் விடிவு காலம் உள்ளது.
பிரதமர் மோடி மக்களாேட அக்கவுன்டில் எப்போதும் பணம் போடுவதாக சொல்லவே இல்லை. அப்படி அவர் சாென்னதா யாரும் நிரூபிச்சா,நான் அரசியலைவிட்டே போய்விடுகிறேன். நிரூபிக்க முடியலைன்னா,நீங்க மீடியா வேலையை விட்டு போகத் தயாரா?' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஊடகங்களுக்கு சவால் விட்டார்.