அமித்ஷா சொட்டு நீர் பாசனம் என ஹிந்தியில் கூறியதை ஹெச்.ராஜா சிறுநீர் பாசனம் என மொழி பெயர்த்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹைலைட்.
கடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். ஹெச்.ராஜா கூறியதை கிண்டலடித்து பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பக்கதில், மைக்ரோ என்ற சொல்லுக்கு சிறிய, நுண்ணிய, நுண் என்றெல்லாம் அர்த்தம் உண்டு என்று கூறுவது போல் ஒரு டிவிட்டை நேற்று ஹெச்.ராஜா பதிவு செய்திருந்தார்.
மைக்ரோ என்கிற வார்த்தைக்கு சிறிய, நுண்ணிய என்ற அர்த்தம் சரிதான். ஆனால், மைக்ரோ இரிகேஷன் என்ற வார்த்தைக்கு சொட்டு நீர் பாசனம் என்பதுதான் சரியான வார்த்தை. இது கூட தெரியாமல் ராஜா மீண்டும் முட்டு கொடுத்ததால் கொதிப்படைந்த நெட்டிசன்கள் தப்பாக உளறியதும் இல்லாமல், அதை சரி என மீண்டும் கூறுகிறார்களா எனக்கூறி ஹெச்.ராஜாவை மீண்டும் கிண்டலடிக்க தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், ஹெச்.ராஜா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் “இன்று தினகரன் பத்திரிக்கையில் 14ம் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. 200/- ரூபாய்க்கு மீம்ஸ் போடும் கும்பல் சிறுநீர் மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர் என்று கூச்சல் போடும் பாருங்கள்”எனக் குறிப்பிட்ட அந்த செய்தியை வெளியிட்டிருந்தார்.
அதில், சிறு நீர்மூழ்கியுடன் வந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி தொடர்ந்து நான் கூறியது சரிதான் என்பது போல் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்து வருகிறார். இதைக் கண்ட நெட்டிசன்கள்.. மிஸ்டர் ராஜா... அது சிறு நீர்முழ்கி.. பிரித்து படிக்க வேண்டும்.... முட்டு கொடுப்பதை நிறுத்துங்கள்.... என கருத்து தெரிவித்து வருகின்றனர்.