தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் குறிப்பாக நாகர்கோயில் கன்னியாகுமரி பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அங்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வட மாவட்டங்களில் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்து விட்ட நிலையிலும் வெயில் கடுமையாக இருந்து வருவது மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி மதுரை கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் இந்த மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது