இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
வங்ககடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மையம் இன்னும் 12 மணி நேரத்தில் தோன்றும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை தொடரும் என்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.