Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ராமேஸ்வரம் கோயிலுக்குள் புகுந்தது மழை நீர். பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் கோயிலுக்குள் புகுந்தது மழை நீர். பக்தர்கள் அவதி

Arun Prasath

, திங்கள், 25 நவம்பர் 2019 (11:58 IST)
கனமழை காரணமாக ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

வெப்பசலனம் காரணமாக சமீப நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென் தமிழகமான ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதியிலுள்ள சாலைகள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன.

ராமேஸ்வரம் கோவில் மற்றும் அதன் உப கோவிலான லட்சுமண ஈஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில்கள் ஆகியவற்றை மழை நீர் சூழ்ந்தது.
கோவிலில் நடை திறக்கப்பட்டதும், கோவில் ஊழியர்கள் நீரை அகற்றினர். மேலும் ராமேஸ்வரத்தின் பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் நீர் கொந்தளிப்பாக காணப்படுவதாக வெளிவந்துள்ள செய்தி குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் மனைவி இருக்கும் போது இன்னொரு திருமணம்…. வரதட்சனைக் கொடுமை – இளம்பாடகர் மேல் அடுக்கடுக்காக புகார் !