Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இத லஞ்ச ஒழிப்புத்துறைதானே சொல்லனும்.. இவர் ஏன் சொல்றார்?

இத லஞ்ச ஒழிப்புத்துறைதானே சொல்லனும்.. இவர் ஏன் சொல்றார்?
, சனி, 13 அக்டோபர் 2018 (16:27 IST)
தமிழக முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் புகாரில் மேல் முறையீடு செய்யப்படும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
நெடுஞ்சாலையில் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சம்பந்தி மற்றும் உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுத்து முறைகேடு செய்ததாகவும் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இது தொடர்பான விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மீது திருப்தி இல்லை என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டது. 
 
இதைத் தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.  லஞ்ச ஒழிப்புதுறை விசாரித்த நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு. டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என தெரிவித்தார்.
 
உண்மையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்தான் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு முன்னாள அமைச்சர் எப்படி இதை முடிவு செய்து செய்தியாளர்களிடம் கூறுகிறார்? அப்படியெனில், லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுகிறதா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 15 வயது பெண் பலாத்காரம் : இளைஞர் கைது