Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கண்டக்டரை தாக்கிய போலிஸார் – எஸ்.பி.யை நேரில் விளக்கமளிக்க உத்தரவு !

கண்டக்டரை தாக்கிய போலிஸார் – எஸ்.பி.யை நேரில் விளக்கமளிக்க உத்தரவு !
, புதன், 2 அக்டோபர் 2019 (10:37 IST)
நடத்துனரை இரு போலிஸார் தாக்கிய விவகாரத்தில் எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

குமிலியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி பயணித்த அரசு பேருந்தில் திருநெல்வேலி பேருந்து நிலயத்தில் இரண்டு காவலர்கள் சீருடையோடு ஏறியுள்ளனர். அப்போது வழக்கமாக டிக்கெட் எடுத்த வந்த நடத்துனர் காவர்களிடம் வாரண்ட்டை கேட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர்கள் இருவருக்கும் நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு மீண்டும் அந்த காவலர்களிடம் நடத்துனர் வாரண்ட் கேட்டுள்ளார். (வாரண்டி - காவல்துறை சார்பில் காவலர்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு கொடுக்கப்படும் பயண அட்டை). ஆனால் அவர்கள் காட்ட மறுத்து வாக்குவாதம் செய்து அவரை இரத்தம் வரும் அளவுக்குத் தாக்கியுள்ளனர்.

இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆக சமம்ந்தப்பட்ட இரு போலீஸாரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது சம்மந்தமாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.பி. வரும் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருந்துக்கொண்டு பிரச்சாரமா? அழகிரியின் கண்மூடித்தனமான முடிவு!