Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பிரபலங்களை ஏமாற்றி போலி டாக்டர் பட்டம்!? – அண்ணா பல்கலைக்கழகம் புகார்!

Anna university
, புதன், 1 மார்ச் 2023 (11:40 IST)
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்ட விழாவில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்கள் பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் வடிவேலு, யூட்யூபர்கள் கோபி – சுதாகர், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து IACHRC எனப்படும் சர்வதேச ஊழல் தடுப்பு, மனித உரிமைகள் அமைப்பு நடத்தியது. இந்த கௌரவ டாக்டர் பட்டங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டவை என கருதப்பட்டது.

webdunia


ஆனால் அந்த விருது விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தாலும் IACHRC அமைப்பினால் வழங்கப்பட்ட விருது என பின்னர் தெரிய வந்துள்ளது. இதனால் அரசியல் மற்றும் அரசு சாரா ஒரு தனியார் அமைப்பு கல்வி நிறுவனம் ஒன்றில் வைத்து பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் விருது வழங்குவதற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ள புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவர் தெரிவித்துள்ள புகாரில் “அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, வடிவேலு  உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தையும் அந்த அமைப்பு ஏமாற்றியுள்ளது” என்று கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ஒப்புதல் இன்றியே அதன் பெயரில் தொண்டு நிறுவனம் விருது வழங்கி ஏமாற்றிய சம்பவம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா விலகல்.. புதிய அமைச்சர் யார்?