பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கினமாகச் செயல்பட்டால் இனிமேல் 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேர்வு தொடங்கி ஏப்ரல் 13 -ஆம் தேதி பள்ளிப் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தேர்வின் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேர்வில் காப்பி அடித்த, விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல், போன்ற தவறுகளில் ஈடுபட்டால் இந்த செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.