தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் பகல் வேளைகளில் வெளியிலில் அதிகமாக செல்வதை தவிர்கின்றனர்.இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவே இல்லை. ஆனால் வெயிலின் தாக்கம் இப்பொழுதே அதிகமாக உள்ளது.
நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில் நேற்று வெயில் மிகவும் உக்கிரமாக இருந்தது. இதனையடுத்து வரும் 2 நாட்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் திருவள்ளுர், திருச்சி, வேலூர், சேலம், பரமத்தி, மதுரை, தருமபுரி, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கரூர் மாவட்டம் பரமத்தியில் 103 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.