தி.நகரின் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டில் அதிகாரி ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு வந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த ஜெ.தீபா எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். ஆனால், அவர் அரசியல் சார்ந்து எந்த ஒரு நகர்வுகளையும் மேற்கொள்வதாக இல்லை.
இந்நிலையில், இன்று காலை அவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் வந்துள்ளார் என தகவல் வெளியாகியது.
கூடுதல் அதிகாரிகள் வந்தவுடன் சோதனை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், மித்தேஷ் குமார் வருமான வரித்துறை அதிகாரி இல்லை என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
தப்பிய ஓடிய அந்த நபரை போலீஸார் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர்? எதற்காக இந்த வருமான வரித்துறை நாடகம் என அந்த நபரி பிடித்தவுடன் விசாரணையில் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.