தமிழக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்கள் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், பொன்முடி உள்ளிட்டார் வீட்டில் சோதனை நடந்த நிலையில் தற்போது அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள எ.வ.வேலு அவர்களின் வீடு அலுவலகம் உள்ளிட்ட அவற்றின் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.