Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டி:தனியார் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம்

archery
, வியாழன், 12 மே 2022 (21:59 IST)
கோவாவில் நடந்த சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டியில் விருதுநகரைச்  சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
 
கோவாவில் கடந்த 5ம் தேதி முதல் 8ம்  தேதி வரை சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டிகள் நடந்தது.
 
 இந்த வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு, மலேசியா, ஸ்ரீலங்கா, பாங்காங், நேபால், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளிலிருந்து 265 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து விருதுநகர்  மாவட்டம் ஆர்.ஆர்.நகரைச சேர்ந்த டாக்டர் விஜய் ஆனந்த் - ஜெயலட்சுமி அவர்களின் 9ம் வகுப்பு பயிலும் 14 வயது பள்ளி மாணவன் செளமித் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த டாக்டர் மதன் - டாக்டர் வித்யாலட்சுமி அவர்களின் மகன்  7 ம் வகுப்பு பயிலும் 12 வயது பள்ளி மாணவன் வித்யூத் ஸ்வேடன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதில் காம்பவுண்ட் போ  பிரிவில்  மாணவன் செளமித், ரீக் கோபோ பிரிவில் மாணவன் வித்யூத் ஸ்வேடன் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து தங்கம் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
 
இந்த மாணவர்கள் வில்வித்தைப் போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த 5 வருடங்களாக பயிற்சியாளர் சுப்பிரமணியிடம் பயிற்சி எடுத்து கொண்டு சர்வதேச அளவில் நடந்த வில்வித்தை பயிற்சியில் பங்குபெற்று தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். போட்டிகளை முடித்து தமிழகம் வந்த மாணவர்களுக்கு இன்று அவர்கள் பயில்கின்ற விஸ்டம் வெல்த் இண்டர்நேஷனல் பள்ளியில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது.
 
 இதில் முதல்வர் - மணி சுரேஷ்,தாளாளர் - திருச்செந்தூரன்,செயளர் - சிங்காரவேலன் மற்றும் பள்ளி நிர்வாகத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து..