சென்னையில் தற்போது சாதாரண மின்சார ரயில் மட்டுமே இயங்கி கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஏசி மின்சார ரயில் இயங்கும் என்றும் அதற்கான ரயில் தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐ.சி.எஃப் ரயில் தயாரிக்கும் ஆலையில் ஏராளமாக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வந்தே பாரத் ரயில் போலவே இந்த ரயிலும் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை எளிதாக சென்று வர முடியும் என்றும், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடைய, தானியங்கி கதவுகள் கொண்ட, ஜிபிஎஸ் அடிப்படையில் தகவல் வசதி பெரும் வகையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே ஏசி மின்சார ரயில்கள் மும்பை ரயில்வே கோட்டத்திற்கு தயாரித்து வழங்கி உள்ள ஐ.சி.எஃப், அடுத்ததாக சென்னைக்கு ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணியில் ஈடுபட போவதாகவும், அடுத்த நிதியாண்டில் இரண்டு ஏசி ரயில்கள் தயாரிக்கும் பணியை முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.