சென்னை அயனாவரம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார். அவரது மனநலம் முன்னேற்றம் அடைவதற்கான சிகிச்சைகள் மருத்துவரால் அளிக்கப்பட்ட போது, அவருடைய வயிற்றில் சாவி, செயின், கம்பிகள் சிம்கார்டு, ஆணி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
எனவே உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவ்ருக்கு மருத்துவர்கள் அவரது வயிற்றுக்குள் எண்டோஸ்கோப்பி எனும் நவீன உள்நோக்கு கருவியை அனுப்பி இரைப்பை மற்றும் குடல் ஆகியவற்றில் சுமார் சாவி, ஆணி, கம்பிகள் போன்றவற்றை அகற்றினர்.
இந்த சிகிச்சை குறித்து மருத்துவ துறையின் தலைவர் டாக்கட் வெங்கடேசன் பேசுகையில், ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் அதனால் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் விழுங்கியிருக்கிறார். தற்பொது உரிய நேரத்தில் சிகிச்சை தராதிருந்தால் குடலில் ரத்தப்போக்கு ஏற்பட்டு நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.
தற்போது ஜெயக்குமார் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.