தமிழக அரசியலில் எதிரும் புதிருமான இருப்பது இரு திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தான். சமீபத்தில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சரியான பதிலடி கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முதல்வரின் வெளிநாடு சுற்றுப்பயணத்தைக் குறித்து பாராட்டி இருந்தால் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் மீது மதிப்பு உயந்திருக்குமென தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல் - மெக்சிஸ் மற்றும் ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கி இன்று நீதிமன்றத்திடம் முன் ஜாமூன் கேட்டுக்கொண்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது : ப . சிதம்பரத்தின் கைதுக்குப் பின் மு.க. ஸ்டாலின் பேச்சில் மென்மை கூடியுள்ளதாகவும், அவர் மத்திய அரசை அதிகாக விமர்சிக்கவில்லை எனவும் கூறினார்.
இதற்குக் பதிலடி தரும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி : ஸ்டாலின் குரலை ஆராய்வதுதான் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேலையா என கேள்வி எழுப்பியுள்ளார்.