Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தலைநகரை ஆட்டி படைத்த அரசியல் குரல்... யார் இந்த ஜெ.அன்பழகன்???

தலைநகரை ஆட்டி படைத்த அரசியல் குரல்... யார் இந்த ஜெ.அன்பழகன்???
, புதன், 10 ஜூன் 2020 (10:24 IST)
திமுகவின் முக்கிய நபரான ஜெ.அன்பழகனின் இறப்பு பலருக்கும் வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62.
 
திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு ஜூன் 10 ஆம் தேதியான இன்றுதான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது திமுகவினர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இவரது இறப்பு திமுகவின் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. 
webdunia
யார் இந்த ஜெ.அன்பழகன்??? 
1949 ஆம் ஆண்டு திமுக துவங்கிய போதே கட்சியில் இருந்த பழக்கடை ஜெயராமனின் மகன்தான் ஜெ. அன்பழகன். பி.ஏ. பொருளாதாரம் படித்தவர். 
 
1976 ஆம் ஆண்டு ஸ்டாலின், முரசொலி மாறன் உள்ளிட்டோருடன் ஜெயராமனும் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது, அவர்களை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
 
இதனை எதிர்த்து எழும்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. அவரோடு போராட்டத்தில் பங்கேற்றார் ஜெ.அன்பழகன். 
 
அப்போது முதல் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவராக உருவெடுக்க துவங்கினார் ஜெ.அன்பழகன்.  இதன் பின்னரே திமுகவில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்ள துவங்கினார். 
 
1985 ஆம் ஆண்டு ஜெ.அன்பழகனின் தந்தை, ஜெயராமன் உயிரிழந்ததையடுத்து, பகுதிச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1995 ஆம் ஆண்டு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்ட பிறகு 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெறி பெற்றார். 
webdunia
அதே ஆண்டு அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வுக்கு எதிராக மறியல் போராட்டத்தை கையில் எடுத்த ஜெ.அன்பழகனை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தலைவர் கருணாநிதியே நேரடியாக போராட்டத்தில் இறங்கினார். 
 
அடுத்தடுத்து 2011, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் தனக்கென தனி இடத்தை பிடித்து மற்றவர்களை வளர்த்து வந்தவர் ஜெ.அன்பழகன். 
 
முன்னாள் தலைவர் கருணாநிதி முதல் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரை இவர்களின் நம்பிக்கைக்குரியவராக வளர்ந்து நின்ற ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 லட்சத்து 76 ஆயிரம் பாதிப்புகளை தாண்டிய இந்தியா! – மாநிலவாரி நிலவரம்!