பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் பணக்காரர் என்று கூறப்படும் ஜெகத்ரட்சகன் அவர்கள் தனக்கு 649 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தன்னுடைய பெயரில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் உறுதிமொழி பத்திரத்துடன் சமர்ப்பித்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருடைய சொத்து பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த சொத்து பட்டியலில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெகத்ரட்சகன் தனது ஆண்டு வருமானம் 45,62,880 ரூபாய் என்றும், தனது பெயரில், மனைவி பெயரில் 14,37,09,982 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் 39,08,77,846 ரூபாய் மதிப்பில் அசையா இருப்பதாகவும் குறிப்பிட் மொத்தம் 53,45,87,828 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார்.
மேலும் வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் பிறரிடமிருந்து ரூ.649 கோடியே 50 லட்சம் கடன் பெற்றிருப்பதாகவும், வருமான வரி மேல்முறையீடு தொடர்பாக 7,26,70,968 ரூபாய் தொகையையும் நிலுவையில் காட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தனது பெயரில் ஒரு கார்கூட என்றும் தனது மனைவி பெயரில் இரண்டு கார்கள் இருப்பதாகவும் அவர் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.