ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் என்பது தான் கேள்வி என முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று இரவு கவர்னர் உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவை தற்போது அவர் நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கவர்னரின் இந்த செயல்பாடு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆளுநர் ரவி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது என்றும் ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விக்கு திமுக தரப்பினார் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என்பதை பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போம்