உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகிய பதவிகளுக்கான தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், எந்த சட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் முதல்வர் எடப்பாடிக்கு எடுபிடியாக பணி செய்கிறது தேர்தல் ஆணையம் என விமர்சித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ”மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது” என விமர்சித்துள்ளார்.
மேலும் “உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை அதிமுகவின் மீது சுமத்த ஸ்டாலின் முயற்சிக்கிறார். 2016 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு கோரி வழக்கு தொடுத்தது ஸ்டாலின் தான்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.