திமுக பாஜகவிடம் 5 கேபினட் அமைச்சர்கள் பதவிக் கேட்டு பேரம் பேசி வருவதாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சந்திரசேகரராவ், ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் விளைவாக மூன்றாவது அணி அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் அதற்கு வாய்ப்பில்லை என்பத் போல தலைவரக்ள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சந்திப்புக் குறித்து அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘திமுக கலைஞர் காலத்தில் இருந்தே சந்தர்ப்ப வாதக் கட்சிதான். எமர்ஜென்ஸியை எதிர்த்துக்கொண்டே நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியைத் தருக எனக் கூறியவர்கள். 3 ஆவது அணி அமைக்க மட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள பாஜகவுக்கும் தூது விட்டு 5 கேபினட் அமைச்சர்கள் பதவிக் கேட்டுள்ளனர். அவர்கள் எல்லோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பதவிப் பெறும் முடிவில் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.