ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவச சேவை தொடங்கி 5 மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவச சேவை மூலம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்து சென்று கொண்டிருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முடிவடையும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் புத்தாண்டு சலுகை என்ற பெயரில் மார்ச் 31ஆம் தேதி இந்த சேவை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
முதலில் 4GB டேட்டா வழங்கி வந்த ஜியோ நிறுவனம் புத்தாண்டுக்கு பிறகு 1GB ஆக குறைத்துக்கொண்டது. இந்நிலையில் தற்போது மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு டேட்டாவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஜியோ நிறிவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் குரல் வழி சேவைகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜியோ வாடிக்காயாளர்கள் எண்ணிக்கி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சேவை தொடங்கிய 5 மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்து செல்கிறது ஜியோ நிறுவனம்.