தென்காசியில் இரண்டு முக்கிய தலைவர்களான ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி போட்டியிடுவதை அடுத்து தலித் வாக்குகள் பிரியும் என்றும் அதனால் திமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
தென்காசி தொகுதியில் அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவின் கூட்டணி வேட்பாளராக ஜான்பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
இந்த தொகுதியில் தலித் வாக்குகள் அதிகம் இருக்கும் நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் திமுக வேட்பாளர் ராணி ஜெயக்குமார் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே டாக்டர் கிருஷ்ணசாமி இதே தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் இந்த முறையாவது அவர் எம்பி ஆக வேண்டும் என்று முயற்சித்து வரும் நிலையில் ஜான்பாண்டியன் அவருடைய கனவை கலைத்து விடுவார் போல் தெரிகிறது