ஒருகாலத்தில் கேரளாவைப்போல தமிழகத்திலும் லாட்டரி சீட்டு விற்பனையில் கொடிகட்டிப்பறந்தது.ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அன்னாடங்காய்சிகளின் பிழைப்பை கெடுகும் அந்த லாட்டரி சீட்டு விற்பனை ஒருவழியாக தடைசெய்யப்பட்டது.இதனால் தாய்க்குலங்களெல்லாம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திளைத்தனர்.
அதிர்ஷடக்காத்து அடித்தால் மட்டும்தான் இந்த லாட்டரி தனத்தைக் காட்டு.அதிலும் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இது பலிக்கும். தனக்கும் யோகம் வரும் என பாடுபட்டு சம்பாரித்த பணத்தை எல்லாம் அனுதினமும் , லாட்டை சீட்டுக்கு செலவழித்துவிட்டு வீட்டில் அடுப்பு எரியாமல் வறுமையில் எத்தனையோ குடும்பங்கள் நொந்திருக்கின்றனர். நல்லவேளை இப்போது லாட்டரி சீட்டு வழக்கத்தில் இல்லை என்று நிம்மதியாக இருக்கும் சூழ்நிலையில் தற்போது ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் சூடுபறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காகித லாட்டரி சீட்டுகள் தான் முடிந்தது என நினைத்தால் இப்போது கிளாம்பிம் இருக்கும் இந்த ஆன்லைன் விற்பனையால் நம் குடிமக்கள் மறுபடியும் வேதாளம் முறுங்க மரம் ஏறாமல் மிருந்தால் சரிதான்.
நிலைமை இப்படி இருக்க கோவை மாவட்டத்தில் சக்தி செல்லும் சாலையில் உள்ள அன்னூரில் இந்த ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ப்னையில் சூடுபறப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
முதலில் இருந்ததை போன்று சில பத்துக்களில் தொடங்கும் விலையானது ஆயிரங்கள் வரை இருப்பதாக தெரிகிறது.
இதற்கென்று வாடிக்கையாளர்களிம் வருகை இருப்பதால் இந்த லாட்டரிகளை விற்பதற்கென விற்ப்னையாளர்களும் உள்ளனர்.
பழைய குருடி கதவை திறடி என்பது போல காகித வடிவில் இருந்த லாட்டரி சீட்டு விற்பனை இப்போது நாவீன வடிவில் வந்திருப்பது சமுதாயத்திற்கு நல்லதற்கு அல்ல என்று படுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.