உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிப்பது கிட்டத்தட்ட உறுதி என்பது போல் உள்ளது அவர் சற்று முன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள கவிதை.
குறிப்பாக முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்ற வரிகள் அவர் முடிவு செய்துவிட்டதையே மறைமுகமாக குறிக்கின்றது. தேவையில்லாமல் கமல் என்னும் சிங்கத்தை சீண்டிவிட்ட அரசியல்வாதிகள் இனி என்ன பாடு படப்போகின்றனர் என்பதை பொதுமக்கள் பார்க்கத்தான் போகின்றனர். அனேகமாக தமிழகத்திற்கு நல்ல காலம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
கமல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள கவிதை இதுதான்
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில்
உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முன்னவரே தலைவர்
அமையாது அலைபவர்க்கும்
அமைந்த என் தோழர்க்கும்,
விரைவில் ஒரு விளி கேட்கும்.
கேட்டு அமைதி காப்பீர்.
உண்மை வெயிலில் காயும்