Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எங்கும் வருவோம் உமைத் தடுக்க...மக்கள் நீதியே வெல்லும்' கமல்ஹாசன் ட்வீட்

எங்கும் வருவோம் உமைத் தடுக்க...மக்கள் நீதியே வெல்லும்' கமல்ஹாசன் ட்வீட்
, சனி, 9 மே 2020 (21:21 IST)
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளிலும் சமூக விலகலை பின்பற்றவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் அதிரடியாக நேற்றூ மாலை  சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த உத்தரவால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய அரசியல் கட்சிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், 

டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை எனவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து நடிகர் கமல்ஹசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார்.

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும். என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா…சென்னையில் மட்டும் 279 பேர் பாதிப்பு !!