திமுகவையும் மதுரையையும் பிரிக்க முடியாது என்பது போல் மதுரையையும் என்னையும் பிரிக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.
மதுரையில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் சு வெங்கடேசன் அவர்களுக்கு வாக்கு கேட்டு கமல்ஹாசன் பேசியபோது வெங்கடேசன் நல்லவர், பட்டம் பெற்றவர், இவர் கண்டிப்பாக இந்த தொகுதியில் ஜெயித்தால் மக்களுக்கு நல்லது செய்வார், நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தான் நானும் அரசியலுக்கு வந்தேன் இவர் வந்த காரணமும் அதேதான்
வழக்கமாக அரசியலுக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்பார்கள், நான் புதிய அரசியலை அரசியல் நாகரிகத்தை உருவாக்க வந்திருக்கேன் என்று பெருமையாக மார்தட்டி சொல்வேன் என்று தெரிவித்தார்
இந்தியாவின் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்க முடிந்த அவர்களால் மதுரையில் ஏன் உருவாக்க முடியவில்லை என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை, மதுரையையும் திமுகவையும் எப்போதுமே பிரிக்க முடியாது, அதுபோல் என்னையும் மதுரையையும் பிரிக்க முடியாது என்று கமல்ஹாசன் பேசினார்
மதுரையை நவீன நகராக மாற்றிய பெருமை கலைஞரை சேரும், முதலில் மாநகராட்சியாக தரம் உயர்த்தினார், அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தின் கிளையை இங்கே கொண்டு வந்தார், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் என முதல்வரும் மதுரைக்கு தேவையான திட்டங்களை செய்து வருகிறார், அதனால் திமுகவையும் மதுரையையும் பிரிக்க முடியாது என்று கமல்ஹாசன் பேசினார்.