தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்தின் போது காயமடைந்தவர்களை காண சென்ற ரஜினிகாந்த் போராட்டத்தில் வன்முறையாளர்கள் விஷக்கிருமிகள் ஊடுருவி விட்டார்கள் என்று கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ரஜினியின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு...
நான் காந்தியின் சீடன். போராட்டம் என்பது கத்தியும், வாளையும், துப்பாக்கியை கொண்டு நடத்துவது அல்ல. துப்பாக்கியே வந்தாலும் அதை திறந்த மார்புடன் எதிர்கொள்ளும் தன்மையை நாம் தூத்துக்குடியில் பார்த்தோம்.
போராட்டத்தில் வன்முறை இருந்தது என்றால் அதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், போராட்டத்தை நிறுத்தக் கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வன்முறையாளர்கள் ஊடுருவிட்டனர் என்ற ரஜினியின் கருத்தில் என்னைப்பொருத்தவரை அப்படி இல்லை, அப்படி பார்த்தால் நானும் வன்முறையாளன்தான் என கூறியுள்ளார்.