நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று அப்துல்கலாம் வீட்டிலிருந்து துவங்கினார். மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடிவின் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை ஏற்றினார். அதன் பின்பு பின்வருமாறு பேசினார்...
நான் உங்கள் கருவே மட்டுமே உங்கள் தலைவன் அல்ல என குறிப்பிட்டுள்ளார். நான் அறுவுரை கூறும் தலைவன் அல்ல. அறிவுரை கேட்கும் தொண்டன். நமக்கு இன்னும் நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டமல்ல. ஊழலில் தேய்ந்த கை விரல் சுடும். இப்போது வந்திருக்கும் கூட்டம் ஒரு சோற்று பருக்கைதான். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டு பாருங்கள். தொடுபவர்களின் கை விரல் சுடும் என பேசினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சோம்நாத் பாரதி, பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும், கட்சியின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.