தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாக முதற்கட்டமாக 70 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட மய்யம் தற்போது இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
மநீம தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவும், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் கமல்ஹாசன் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடாத தொகுதியில் களம் இறங்குகிறார்.