நேற்று நிவர் புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன் அரசு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் ஏகப்பட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மின்கம்பங்கள் அறுந்தும், மரங்கள் விழுந்தும் உள்ள நிலையில் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில் நேற்று புயல் மழையால் பாதிக்கப்பட்ட சைதாபேட்டை பகுதியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள 250 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கி பேசிய அவர் “விளம்பர பலகைகள் விழுந்து விபத்து ஏற்படுவது இன்னமும் தொடர்கிறது. நாங்கள் அரசு கிடையாது, அரசிடம் உள்ளது போல எங்களிடம் கஜானாவும் கிடையாது. எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். நிவாரணம் என்பது இந்த வருடத்திற்கானது. அதை தாமதிக்காமல் அரசு மக்களுக்கு உடனே வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.