தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசின் திட்டங்கள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன் தற்போது தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “23 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பள்ளி செல்லவேண்டிய சிறுவர்கள் குடும்பம் காக்க உழைக்கச் சென்று விட்டார்கள். தமிழகம் ஏழ்மையில் தகிப்பதன் அடையாளம் இது.” என தெரிவித்துள்ளார்.