உதயநிதி ஸ்டாலினுக்கு கழகத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டதில் இருந்து கனிமொழிக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது.
திமுகவில் முக்கிய பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்படவில்லை என்ற கருத்து பல காலங்களாக நிலவி வரும் சூழலில், இப்போது உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளதாம். இதனால் கனிமொழி திமுக நிர்வாகிகள் பலருடன் நட்பு பாராட்டுவதை குறைத்துக் கொண்டும் வருகிறாராம்.
இதுமட்டுமின்றி கலைஞர் தொலைக்காட்சியிலும் கனிமொழி தொடர்பான செய்திகள் பெரிதாக எதுவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதும் இல்லையாம். ஒருப்பக்கம் திமுக இளைஞரணி உதயநிதியை முன்னிறுத்தியே போஸ்டர்கள் அடிக்கப்படுவதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் தூத்துக்குடி இளைஞரணி அமைப்பாளர் ஒருவர் அடித்த போஸ்டரில் தலைவர் கலைஞரின் புகைப்படம் இல்லாமல் ஸ்டாலின், உதயநிதி மற்றும் ஒரு ஓரத்தில் கனிமொழி படங்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு இருந்தது.
இப்படி திமுக தங்களது தலைவரையே மறந்து செயல்படும் போது கனிமொழியை மறப்பது ஒன்னும் பெரிய விஷயம் அல்ல என கூறப்படுகிறது.