ரஜினி குறிப்பிட்ட வெற்றிடம் குறித்தும், ரஜினி-கமல் இணைப்பு குறித்தும் கருத்து கூறிய கனிமொழி எம்பி, முதலில் ரஜினி அரசியலுக்கு வரட்டும் அதன் பின்னர் பார்க்கலாம் என்று கூறினார்.
இன்று செய்தியாளர்களை கனிமொழி எம்பி சந்தித்தபோது, கமல்-ரஜினி இணைப்பு குறித்த கேள்விக்கு,’கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். இன்னொருவர் வருவாரா இல்லையா என்பது இன்னமும் முடிவாகவில்லை. அவர் கட்சித் தொடங்கி இருவரும் இணைந்து, அந்த அறிவிப்பு வந்த பிறகு பார்க்கலாம். அதுவரை அதைப் பற்றி நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
ரஜினி கூறிய வெற்றிடம் குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி, ‘எங்களைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழகத்தில் ஆளுமை வெற்றிடம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறோம்’ என்று பதிலளித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவில் உள்ள தலைவர்கள் ரஜினி, கமல் விவகாரம் குறித்து கண்டுகொள்ளாமலும் கருத்து சொல்வதை தவிர்த்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது