இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று மழையின் காரணமாக இடிந்து விழுந்ததில் அருகில் வீடுகளில் வசித்த 17 பேர் உயிரிழந்தனர். சுவற்றை கட்டியவரை கைது செய்ய வேண்டும் என்றும், இறந்தவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் பொதுமக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டதில் போலீஸுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தலைமறைவான சுற்றுச்சுவர் வீட்டின் சொந்தக்காரர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் வலை வீசி தேடி வந்தனர். தற்போது தனது வீட்டை சுற்றி 20 அடி உயர்த்துக்கு கல்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் 17 பலியானதிற்கு வருத்தம் தெரிவித்து பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித், திண்டாமை சுவர் இடிந்து 17 பேர் பலை என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
இதன் பின்னர் திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் இந்த சுவரை திண்டாமை சுவர் என்றே குறிப்பிட்டார். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? தீண்டாமையின் சுவர் - பரிதாபகரமான மற்றும் வேதனையான சம்பவம் என் அவருத்தம் தெரிவித்துள்ளார்.