Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உலக சாதனை நிகழ்த்திய கரூர் பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகடமியின் வீராங்கனைகள்

skating
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (00:35 IST)
முதன்முறையாக உலக சாதனை நிகழ்த்திய கரூர் பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகடமியின் வீராங்கனைகள் – 5 வயது சிறுமி 13 கி.மீட்டர் தூரம் ஸ்பீடு ஸ்கேட்டிங் மாரத்தான் நிகழ்த்தி சாதனையும், 3 வயது சிறுமி 30 நிமிடம் நிற்காமல் ஸ்பீடு ஸ்கேட்டிங் மாரத்தான் நிகழ்த்தி சாதனை .
 
 
கரூர் அருகே  சின்ன கோதூர் சாலையில் உள்ள பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் நோபள் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது., ஏற்கனவே தமிழக அளவில், தேசிய அளவில் மட்டுமில்லாமல், உலகளவில் சாதனை பிடித்த பல்வேறு வீரர், வீராங்கனைகளை கொண்ட இந்த ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமியில், இன்று நடைபெற்ற இந்த நோபள் வேர்ல்டு ரெக்கார்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர்  மாவட்டம் மட்டுமில்லாது,  கோவை,  சென்னை, திருவண்ணாமலை,  மதுரை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்டனர்.

பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி  நிறுவனத்தலைவர் சரவணன் மற்றும் லட்சுமி தீபக் தலைமையில் நடைபெற்ற  இந்த ஸ்கேட்டிங் தனிப்பிரிவில் கலந்துகொண்ட 3 வயது ஜேஸிகா 30 நிமிடத்தில் 5 கிலோமீட்டர் நிற்காமல் சுற்றி சாதனை படைத்தார்.  இவரை தொடர்ந்து 5 வயது சிறுமி பிரித்திவிகா என்ற வீராங்கனையும், 13 கி.மீட்டர் தூரத்தினை 25 நிமிடம் 35 நொடிகளில் கரூர் டூ சேலம் பைபாஸ் சாலையில் நாவல் நகர், குமாரசாமி பொறியியல் கல்லூரி வழியாக அய்யம்பாளையம் சென்று புதிய சாதனை பிடித்துள்ளார்.

இவர்களுக்கு நோபள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.  இதில், 53 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட குரூப் ஸ்பீடு ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டவர்கள் பங்கேற்றதில், ஒரு சுற்றுக்கு 200 மீட்டர் தூரம் உள்ள நிலையில், அந்த சுற்றுக்கணக்கு விகிதம் 419 சுற்றுகளை 5 மணி நேரத்தில் அனைவரும் சுற்றி சாதனை பிடித்துள்ளனர்.

இந்த உலக  சாதனையில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள்  மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நோபள் புக் ஆப் ரெக்கார்டு நிர்வாகிகள் வினோத்,  பரத்குமார்., தீபக் உள்ளிட்டோர் பங்கேற்று இந்த சாதனை நிகழ்ச்சியை நடத்தினர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணில்கடித்து மின்கம்பிகள் துண்டாகினவா ? அணில் கடித்து ஆடுகள் இறந்தனவா ? விவசாயிகள் சோகம்